சென்னை மேற்கு தாம்பரம், சிடிஓ காலனி, பல்லவன் தெருவில் (31) வயது மதிக்க தக்க பெண் ஒருவர் சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இவரது கணவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்,
இவர்களது வீட்டின் எதிரே ராமலிங்கம் (65) என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் மேற்கு தாம்பரம் – முடிச்சூர் பிரதான சாலையில் பட்டம்மாள் கேஸ் ஏஜென்சீஸ் என்ற எரிவாயு விற்பனை செய்யும் நிலையத்தை நடத்தி வருகிறார்.

கடந்த சில மாதங்கள் முன்பு ராமலிங்கம் தான் இருந்த வீட்டை காலி செய்துவிட்டு வீட்டை விற்பனை செய்யப் போவதாக கூறி எதிர் வீட்டில் வசிக்கும் பெண்ணிடம் சாவியை கொடுத்து விட்டு சென்றுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் வீட்டிற்கு வந்த முதியவர் தனது வீட்டை வாங்குவதற்காக ஆட்கள் வருவதாகவும் அது வரை பெண்ணின் வீட்டில் தங்கிய இருந்த முதியவர் ஆளில்லா நேரத்தில் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்,
இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண் முதியவர் கொடுத்த தொல்லை குறித்து தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து முதியவர் ராமலிங்கத்தை சிறையில் அடைத்தனர்.