இந்திய கிரிக்கெட் அணியின் புதிய கேப்டன் இவர் தான்? ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து கோலி விலகியதையடுத்து, ரோஷித் சர்மா கேப்டனாக செயல்பட்டு வருகிறார். ஒருநாள் போட்டிகளிலும், டி20 போட்டிகளிலும், இவரே கேப்டனாக செயல்பட்டு இருந்து வருகிறார்.

இந்நிலையில், இந்திய அணிக்கு, புதிய கோப்டனை தேர்ந்தெடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஆல் ரவுண்டராக கலக்கி வரும் ஹர்திக் பாண்டியாவை தான், BCCI தேர்ந்தெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

“இதுகுறித்து ஹர்திக் பாண்டியாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. முடிவு எடுப்பதற்காக சில நாட்கள் தேவை என்று அவர் கூறியிருக்கிறார். அவரின் முடிவை பொறுத்து தான், என்ன நடக்கும் என்பதை சொல்ல முடியும்..” என்று நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் கசிந்துள்ளது.

தொடர்ந்து பல்வேறு தொடர்களில் சிறப்பாக விளையாடியதை தொடர்ந்தே, அவருக்கு கேப்டன் பதவி கொடுப்பதற்கு BCCI முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இவரது கேப்டன்சியில், இந்திய அணி எவ்வாறு விளையாடுகிறது என்பதை, பொறுத்திருந்து பார்ப்போம்..