120 பெண்களை பாலியல் வன்புணர்வு செய்து வீடியோ எடுத்த ஜிலேபி பாபா..!

அரியானாவின் தோஹானா மாவட்டத்தில் உள்ள பாபா பாலகினாத் கோயில் குருக்களாக இருந்தவர் அமர்புரி என்ற ஜிலேபி பாபா. சாமியாராக மாறுவதற்கு முன்பு, தோஹானாவின் ரெயில்வே சாலை பகுதியில் ஜிலேபி விற்று வந்ததால், அவரை அனைவரும் ஜிலேபி பாபா என்றழைத்தனர். இவர் மீது பல்வேறு பாலியல் ரீதியான வழக்குகள் இருந்தன.

ஜிலேபி பாபா ஒரு பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்குவதற்கு முன்பு அவருக்கு போதை வஸ்துகளை கொடுத்து சுய நினைவை இழக்க செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

தந்திர வித்யா சடங்குகளின் போது, அவர் அவர்களை மயக்கமடையச் செய்து, பின்னர் அவர்களை வன்புணர்வு செய்து வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்து வந்தார். அதுமட்டுமின்றி, வீடியோக்களை கசியவிட்டு விடுவதாக மிரட்டி தன்னுடன் உடலுறவில் ஈடுபடும்படி வற்புறுத்தியுள்ளார்.

ஜிலேபி பாபா ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

அவரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், அவர் 120 பெண்களை பாலியல் வன்புணர்வு செய்யும் ஆபாச வீடியோக்களை போலீசார் கண்டுபிடித்தனர்.

120 பெண்களை பாலியல் வன்புணர்வு செய்து, அதை வீடியோவாக எடுத்த ஜலேபி பாபா என்ற சாமியாரை குற்றவாளி என அரியானா நீதிமன்றம் அறிவித்துள்ளது.

RELATED ARTICLES

Recent News