பா.ரஞ்சித் இயக்கத்தில், ஆர்யா, பசுபதி, துஷாரா விஜயன் ஆகியோர் நடிப்பில் உருவான திரைப்படம் சார்பட்டா பரம்பரை. நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது.
சமீபத்தில், இந்த திரைப்படத்தின் 2-ஆம் பாகம் உருவாக இருப்பதாக, படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். தற்போது இயக்கி வரும் கேங்ஸ்டர் படத்தை முடித்துவிட்டு, சார்பட்டா 2 படத்தை, பா.ரஞ்சித் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், இந்த திரைப்படம் கைவிடப்பட்டுள்ளதாக தகவல் பரவி வருகிறது. அதாவது, இந்த திரைப்படத்தை மிகவும் பிரம்மாண்டமான முறையில், 80 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இயக்குவதற்கு, பா.ரஞ்சித் முடிவு செய்திருந்தாராம்.
மேலும், பிரபல Zee நிறுவனம் உட்பட 3 தயாரிப்பாளர்கள் முன் வந்திருந்தார்களாம். ஆனால், தற்போது இந்த படத்தில் இருந்து, Zee நிறுவனம் விலகியிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிறுவனம் விலகியதால் தான், படம் டிராப் ஆகியது என்ற தகவல் பரவி வருகிறது. ஆனால், நெருங்கிய வட்டாரங்களில் விசாரித்ததில், வேறொரு தயாரிப்பு நிறுவனத்தை வைத்து, இந்த திரைப்படத்தை தயாரிக்க முயற்சிகள் நடந்து வருகிறதாம். இந்த முயற்சிகள் கைகூடும் பட்சத்தில், திரைப்படம் மீண்டும் உருவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.