தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில், 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர் யேசுதாஸ். இவரது பாடல்கள் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் ரசிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இவர் உடல்நலப் பிரச்சனை காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக, சமீபத்தில் தகவல் ஒன்று பரவி வந்தது. இதனை அறிந்த ரசிகர்கள், பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
ஆனால், இவ்வாறு பரவிய தகவல் குறித்து, யேசுதாஸின் மகன் விஜய் யேசுதாஸ் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதன்படி, அவ்வாறு பரவிய தகவல் உண்மையில்லை என்று தெரியவந்துள்ளது. இதன்மூலம், அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.