ஹாத்ரஸ் உயிரிழப்பு: குடும்பத்தினரை சந்தித்து ராகுல்காந்தி ஆறுதல்!

உத்தர பிரதேச மாநிலம், ஹாத்ரஸ் மாவட்டத்தின் புல்ராய் கிராமத்தில் உள்ள திறந்தவெளி மைதானத்தில், போலே பாபா என்ற ஆன்மிக குருவின் சொற்பொழிவு நிகழ்ச்சி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தனியார் சார்பில் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

மாலையில் நிகழ்ச்சி முடிந்து, மைதானத்தைவிட்டு மக்கள் கிளம்பும்போது கடும்நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்தனர். இதில் காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை சுமார் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சூழலில் காங்கிரஸ் கட்சியின் ரேபரேலி தொகுதி மக்களவை உறுப்பினரான ராகுல் காந்தி, இன்று (ஜூன் 5) பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை அவர் சந்தித்தார்.

காங்கிரஸ் கட்சி உதவும் என உறுதி அளித்துள்ளார். மேலும், இந்த சம்பவம் எப்படி நடந்தது என்றும் கேட்டு அறிந்து கொண்டுள்ளார். இதனை பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தெரிவித்தனர்.

RELATED ARTICLES

Recent News