“அஜித் அப்படிப்பட்ட நபர் இல்லை” – பிஸ்மி பேட்டி!

நடிகர் யோகி பாபு ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்திருந்தார். அந்த பேட்டியில், பிரபல சினிமா பத்திரிக்கையாளர்களான அந்தணன், பிஸ்மி, சக்திவேல் ஆகியோரை, மறைமுகமாக விமர்சித்து பேசியதாக கூறப்படுகிறது.

இதனால், கடும் கொதிப்படைந்த அவர்கள், தங்களது வீடியோவில், யோகி பாபுவை கடுமையாக விமர்சித்தனர். மேலும், அஜித் குறித்து, யோகிபாபு பேசியதாக கூறப்படும் பகீர் தகவல் குறித்தும், அவர்கள் தெரிவித்திருந்தனர்.

அதாவது, என்னை தொடாதே என்று அஜித், யோகிபாபுவிடம் கூறியதாகவும், அதனை யோகிபாபு, பிஸ்மியிடம் தெரிவித்ததாகவும், அவர்கள் கூறியிருந்தனர்.

இவர்கள் இரண்டு பேரின் சொற்போரால் நடிகர் அஜித்தும், இந்த சர்ச்சையில் சிக்கியிருந்தார். மேலும், அஜித் தீண்டாமையில் ஈடுபட்டார் என்றெல்லாம், பல்வேறு குற்றச்சாட்டுகள் அஜித் மீது அடுக்கப்பட்டது.

இந்நிலையில், பிரபல ஊடகம் ஒன்றிற்கு, தொலைபேசி வாயிலாக, பிஸ்மி பேட்டி அளித்தார். அந்த பேட்டியில், அஜித் குறித்து யோகிபாபு அவ்வாறு கூறியிருந்தாலும், நாங்கள் அதனை நம்பவில்லை. ஏனென்றால், அஜித் பல்வேறு நபர்களுக்கு உதவியிருக்கிறார். அவரது குணம் பற்றி எங்களுக்கு தெரியும்” என்று கூறியுள்ளார்.

RELATED ARTICLES

Recent News