“ராஜினாமா பண்ணிட்டு மீண்டும் தேர்தலில் போட்டியிடுங்க” – ராகுல் காந்தியை தாக்கிய ஏக்நாத் ஷிண்டே!

கடந்த ஜூன் 4-ஆம் தேதி அன்று, நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியானது. இந்த தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, அதிக இடங்களை கைப்பற்றி, 3-வது முறையாக ஆட்சியை பிடித்தது.

இதனை விமர்சிக்கும் வகையில், நேற்று ராகுல் காந்தி, தனது சமூக வலைதளப் பக்கத்தில், பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், “இந்தியாவில் உள்ள EVM மெஷின்கள் ஒரு ப்ளாக் பாக்ஸ். அதனை ஆய்வு செய்ய, யாரும் அனுமதிக்கப்டுவதில்லை. தேர்தல் வழிமுறைகளின் வெளிப்படைத்தன்மை குறித்து, தீவிரமான கவலை, தற்போது எழுந்துக் கொண்டு இருக்கிறது” என்று கூறியிருந்தார்.

இவரது இந்த கூற்றுக்கு, தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த தலைவர்கள் பலர், தங்களது விமர்சனங்களை முன்வைத்து வைந்தனர். அந்த வகையில், தற்போது மகாராஷ்டிராவின் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “2 இடங்களில் ராகுல் காந்தி வெற்றி பெற்றுள்ளார். அதே EVM மெஷின் தான், அங்கேயும் வைத்திருந்தனர். எனவே, அனைத்து இடங்களிலும், EVM மெஷின் பழுதாக உள்ளது என்று அவர் கூற வேண்டும். மேலும், இவர் ராஜினாமா செய்துவிட்டு, மீண்டும் தேர்தலில் போட்டியிட வேண்டும்” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “INDIA கூட்டணி அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்ற மாநிலங்களில் EVM சரியாக உள்ளது, குறைந்த தொகுதிகளில் வெற்றி பெற்ற மாநிலங்களில், EVM சரியாக இல்லை என்பதுதான் ராகுல் காந்தியின் கூற்று. இந்த மாதிரி நடக்குமா?” என்று கேள்வி எழுப்பினார்.

RELATED ARTICLES

Recent News