கூகுள் நிறுவனத்தின் சமையல் பிரிவில் 16 வருடங்களாக பணியாற்றி வந்தவர் ரியான். அனைவருடனும் இணைந்து பணியாற்றவில்லை என்று கூறி, கடந்த 2019-ஆம் ஆண்டு அன்று இவர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்த ரியான், பெண் அதிகாரி ஒருவர் தன்னுடன் உறவுகொள்ள முயன்றார் என்றும், அதற்கு தான் ஒத்துக்கொள்ளாததால், பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் நிறுவனத்தின் சார்பில் எடுக்கப்படவில்லை. அதன்பிறகு தான் பணியில் இருந்து நான் நீக்கப்பட்டேன் என்று கூறிய அவர், பெண்ணாக இருந்திருந்தால், உடனே நடவடிக்கை எடுத்திருப்பார்கள் என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
பாலியல் துன்புறுத்தல், இனப் பாகுபாடு, பழிவாங்கல் ஆகியவற்றால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி அவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அந்த பெண் அதிகாரி, இது முழுக்க முழுக்க பொய் என்றும், வேலையை விட்டு நீக்கிய அதிருப்தியில், அவர் இவ்வாறு பேசுகிறார் என்றும் தெரிவித்துள்ளார்.