உத்தரப்பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாநிலத்தில் அரசு தொடக்கப் பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் குடிபோதையில் மாணவர்கள் முன்பு நிர்வாணமாக தூங்கியதாக கூறப்படுகிறது. மேலும் அந்த தலைமை ஆசிரியர் ஆபாசமான செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
மாணவர்கள் முன்னிலையில் அவர் அடிக்கடி ஆபாசமான செயல்களில் ஈடுபடுவதாகவும், வகுப்பில் அடிக்கடி ஆடைகளை கழற்றிவிட்டு ஓய்வெடுப்பதாகவும் பெற்றோர் கூறினர்.
இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்ததால், கல்வித் துறை அதிகாரி விசாரணைக்கு உத்தரவிட்டார். தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தேவைப்பட்டால், தலைமை ஆசிரியர் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்படும்” என்று கூறினார்.