கொடைக்கானல் அருகே, 5 லிட்டருக்கும் குறைவான தண்ணீர் பாட்டில்களை கொண்டு சென்ற சுற்றுலா பயணிகளுக்கு, இதுவரை 38 ஆயிரம் ரூபாய் பசுமை வரி விதிக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானல், ஊட்டி உள்ளிட்ட மலை பிரதேசங்களில், பிளாஸ்டிக் பாட்டில்களை வீசி செல்வதால், சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது.
இதனை தடுக்க வேண்டும் என்பதற்காக, 5 லிட்டருக்கும் குறைவான தண்ணீர் பாட்டில்களை, மலை பிரதேசங்களுக்கு கொண்டு செல்லக் கூடாது என்று, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், கொடைக்கானலில் உள்ள சோதனை சாவடியில், சுகாதாரத்துறையை சேர்ந்த அதிகாரிகள், கடந்த 4 நாட்களாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சோதனையில், 5 லிட்டருக்கும் குறைவான தண்ணீர் பாட்டில்களை வைத்திருந்த சுற்றுலா பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. மொத்தமாக 4 நாட்களில், 38 ஆயிரத்து 640 ரூபாயை, சுகாதாரத்துறையினர் பசுமை வரியாக வசூலித்துள்ளனர்.