இன்புளூயன்சா எச்3என்2 காய்ச்சல், பரவும் தன்மையுடையது. ஒருவருக்கு காய்ச்சல் வந்தால், இரண்டு அல்லது மூன்று நாட்கள் வீட்டில் தனிமையில் இருக்க வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, ஆயிரம் இடங்களில் காய்ச்சல் மருத்துவ முகாம் நடைபெறும் எனவும் கூறியுள்ளார்.