சுடுகாட்டில் வரிசையாக நிற்கும் பிணங்கள்.. சீனாவில் கடும் பரபரப்பு.. அதிர்ச்சியில் மக்கள்..

சீனாவின் பல்வேறு பகுதிகளில், கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த டிசம்பர் 1-ஆம் தேதியில் இருந்து 20-ஆம் தேதிக்குள் மட்டுமே, 248 மில்லியன் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது, சீனாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 17.56 சதவீதம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களை எரிப்பதற்காக, சுடுகாட்டில் கூட்டம் கூட்டமாக மக்கள் அலைமோதும் வீடியோ, இணையத்தில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்த்துள்ள பொதுமக்கள், பெரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.