அருணாச்சலப் பிரதேசத்தில் கடும் நிலச்சரிவு!

அருணாச்சல பிரதேசம் மாநிலத்தில் கனமழை பெய்வதற்கான எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் முன்பு வழங்கியிருந்தது அதன்படி நேற்று கொட்டி தீர்த்த அதீத கனமழை காரணமாக, அருணாச்சலப் பிரதேசத்தில் பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்திய சீன எல்லைப் பகுதியில் உள்ள அருணாச்சலப் பிரதேசத்தின் திபாங் பள்ளத்தாக்கு பகுதியை இணைக்கும் (NH-33) தேசிய நெடுஞ்சாலையில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. ஹீன்லி-அனினி எனும் பகுதியில் ஏற்பட்டுள்ள பெரும் நிலச் சரிவில் தேசிய நெடுஞ்சாலை முற்றிலும் அடித்துச் செல்லப்பட்டதால் போக்குவரத்து முழுவதும் துண்டிக்கப்பட்டுள்ளது.

அருணாச்சல பிரதேச முதலமைச்சர் பெமா காண்டு, சாலைப்போக்குவரத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாகவும், திபாங் பள்ளத்தாக்க பகுதியில் வசிக்கும் மக்களுக்கு ராணுவத்தின் உதவியுடன் அத்தியாவசிய பொருள்கள் கிடைப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள பகுதிக்கு தேசிய நெடுஞ்சாலை மற்றும் மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் விரைந்துள்ள நிலையில், நிலைமையை சீர் செய்ய குறைந்தபட்சம் மூன்று நாட்களாவது எடுக்கும் என தகவல் தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES

Recent News