வயநாடு அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 19 பேர் உயிரிழந்தனர்.
கேரள மாநிலம் பெய்து வரும் தொடர் கனமழையால் வயநாடு மாவட்டத்தில் இன்று (ஜூலை 30) அதிகாலை 2 மணியளவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து அதிகாலை 4 மணி அளவில் சூரல்மலா பகுதியில் உள்ள பள்ளியில் மற்றொரு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் சுமார் 400 குடும்பங்கள் வெளியேற முடியாமல் அங்கு சிக்கி உள்ளதாக தெரிகிறது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு போலீஸார், தீயணைப்பு படையினர், வனத் துறையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மீட்கப்பட்டவர்களில் 30-க்கும் மேற்பட்டோர் பேர் மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ராணுவமும் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளது.
நிலச்சரிவில் ஒரு வயது குழந்தை உட்பட 19 பேர் உயிரிழந்திருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.