திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணியசாமி கோவிலில் குடியரசு தினத்தை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தீவிர பரிசோதனைக்கு பின்பு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

நாடு முழுவதும் நாளை 74-வது குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு ரயில் நிலையம் பேருந்து நிலையம் வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருச்செந்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஆவுடையப்பன் தலைமையில் 78 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கோவில் தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் ரூ.100 தரிசனம், பொது தரிசனம் வரிசையில் வெடிபொருள் சோதனைக்குப் பின்னரே சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்ப்படுகின்றனர். மேலும் கோவில் வளாகம், கடற்கரை பகுதிகளில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.