ஆப்கானிஸ்தானின் கனமழையால் 300-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளர்.
இது குறித்து தலிபான் அதிகாரிகள் கூறியதாவது:
பாக்லான் பகுதியில் கடந்த சில வாரங்களாகப் பெய்த கனமழை காரணமாக அந்த மாகாணத்திலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300-ஐக் கடந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. வெள்ளப் பெருக்கில் உயிர்பிழைத்தவர்களுக்கு உணவுப் பொருள்களை விநியோகித்ததாக ஐ.நா.வின் உலக உணவு அமைப்பு தெரிவித்தது.