தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று, நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கோவை, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.