Connect with us

Raj News Tamil

சென்னையில் அதிகாலை முதல் கன மழை!

தமிழகம்

சென்னையில் அதிகாலை முதல் கன மழை!

தமிழகத்தின் 9 மாவட்டங்களில் கனமழைக்கு இன்று வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்நிலையில் அதிகாலை முதல் சென்னையில் கிண்டி, கோயம்பேடு, அண்ணா நகர், அம்பத்தூர், தாம்பரம், சோழிங்கநல்லூர், வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக தொடர் மழை பெய்து வருகின்றது.

அதேபோல் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகின்றது. இதனால், வேலூர் மாவட்டத்தில் உள்ள தொடக்க பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மிதமான மழை தொடரும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

More in தமிழகம்

To Top