மேற்கு சீனாவின் ஷான்சி மாகாணத்தின் சியானின் புறநகர் பகுதியில் கனமழை பெய்தது. இதையடுத்து அங்கு வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி 21 பேர் பலியாகினர், 6 பேர் காணாமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதற்கட்ட விசாரணையில், கிராமத்தில் உள்ள இரண்டு வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும், அருகில் உள்ள சாலைகள், பாலங்கள், மின்விநியோகங்கள் மற்றும் பிற உள்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ளூர் தீயணைப்புத் துறை, காவல்துறை மற்றும் அவசரகால மேலாண்மை அதிகாரிகள் மீட்புப் பணியை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.