தமிழகத்தை குளிர்விக்க 14 மாவட்டங்களுக்கு வருகிறது கனமழை..!!

கோடை வெயில் துவங்கியதிலிருந்து தமிழகத்திலிருந்து கடந்த சில தினங்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. கல் நேரங்களில் வெப்ப அலை வீசுவதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் நாளை 14 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் மகிழ்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் நாளை நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை மறுநாள் நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES

Recent News