சென்னையில் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதலே விட்டு விட்டு வெளுத்து வாங்கும் மழையால் சென்னைவாசிகளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால், சென்னையில் நேற்றிரவு முதல் மழை பெய்து வருகிறது குறிப்பாக கோயம்பேடு, அசோக் நகர், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, ஆலந்தூர், சைதாப்பேட்டை, வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.
இதனால் சென்னையில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. குறிப்பாக, அசோக்நகர், கோடம்பாக்கம், கிண்டி கத்திபாரா மேம்பாலம், மேற்கு மாம்பலம் உள்ளிட்ட சாலையில் தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இதே போன்று, சென்னையில் பல்வேறு சாலைகளில் குளம் போல மழைநீர் தேங்கியதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் மற்றும் போக்குவரத்து பாதிப்புக்கு பொதுமக்கள் உள்ளாகி வருகின்றனர்.