Connect with us

Raj News Tamil

கனமழை எதிரொலி: ரயில் சேவை ரத்து- தெற்கு ரயில்வே அறிவிப்பு!

தமிழகம்

கனமழை எதிரொலி: ரயில் சேவை ரத்து- தெற்கு ரயில்வே அறிவிப்பு!

தென் இலங்கை கடற்கரையை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை, நேற்று இரவு வரை இடைவிடாது பெய்து கொண்டே இருந்தது.

இதனை தொடர்ந்து தமிழக அரசு திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நெல்லை – சென்னை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதே போன்று திருச்செந்தூர் – பாலக்காடு, நெல்லை – ஜாம் நகர் இடையே இயக்கப்படும் ரெயில்களும் இன்றைய தினம் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெயில் பாதைகளில் தண்ணீர் தேங்கி உள்ளதால் நிஜாமுதீன் – கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில், முத்துநகர் மற்றும் சென்னை – திருச்செந்தூர் விரைவு ரெயில்கள் கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் சென்னை எழும்பூர் – கொல்லம் இடையேயான விரைவு ரயில் விருதுநகர் ரயில் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

More in தமிழகம்

To Top