13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. லிஸ்டில் உங்க மாவட்டம் இருக்கா?

சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில், கடந்த 2 நாட்களாக மிதமான மழை பெய்து வருகிறது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், இலங்கை கடலோரப் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், குமரிக்கடல் பகுதிகளில் இன்று நிலைபெற உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், டிச. 27-ஆம் தேதி சில இடங்களிலும், 28, 29 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.