இந்த ஆண்டுக்கான போகி பண்டிகை தமிழ்நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. பண்டிகையை முன்னிட்டு மக்கள் பழைய பயனற்ற பொருட்களை எரித்து போகி பண்டிகையை வரவேற்று வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக சென்னை,மயிலாப்பூரில், சைதாப்பேட்டை, எழும்பூர், வேளச்சேரி, பள்ளிகரணை, கிண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்கள் போகி கொண்டாடி, தைத்திருநாளை வரவேற்று வருகின்றனர்..
இந்த நிலையில், பழைய பொருட்களை எரித்து மக்கள் போகி பண்டிகை கொண்டாடி வருவதால் சென்னையில் புகைமூட்டம் அதிகரித்துள்ளது. அதிகாலை வேளையில் சராசரி அளவை விட புகைமூட்டம் அதிகரித்து காணப்படுவதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.