தொடர் மழை காரணமாக கிண்டியில் இருந்து தாம்பரம் செல்லும் ஜிஎஸ்டி சாலையில் ஆலந்தூரில் இருந்து சென்னை விமான நிலையம் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது .
நேற்று முதல் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் ஆங்காங்கே சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் ஆலந்தூரில் இருந்து சென்னை விமான நிலையம் வரை வரை சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவிற்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இருசக்கர வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தவாறு வாகனங்களை ஓட்டுகின்றனர். அதிகப்படியான போக்குவரத்து நெரிசல் காணப்படுவதால் ஆமை வேகத்தில் வாகனங்கள் நகர்ந்து செல்கின்றன.