தமிழ் கடவுள் முருகப்பெருமானின், அறுபடை கோவில்களில் ஒன்றாக இருப்பது திருச்செந்தூர் முருகன் கோவில். இந்த கோவிலில், முருக தரிசனம் மேற்கொள்ளும் பக்தர்கள், அங்குள்ள கடலில் புனித நீராடுவது வழக்கம்.
அந்த வகையில், பக்தர்கள் நீராடும்போது, அந்த கடற்கரைக்கு முள்ளெலிகள் வந்துள்ளன. இதனால், அந்த முள்ளெலிகளின் முட்கள், பக்தர்களின் கால்களில் குத்தி, காயத்தை ஏற்படுத்துகின்றன.
எனவே, கடலில் புனித நீராடும் பக்தர்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். இந்நிலையில், இந்த முள்ளெலிகள் குறித்து அறிந்த கோவில் நிர்வாகம், கடற்படை பாதுகாப்பு பணியாளர்களின் உதவியுடன், முள்ளெலிகளை அப்புறப்படுத்தி வருகின்றனர்.