மும்பையில் உள்ள ஜூஹூவில் இருந்து புறப்பட்டு ஹைதராபாத் நோக்கி சென்று கொண்டிருந்த ஹெலிகாப்டர் பலத்த காற்று மற்றும் மோசமான வானிலை காரணமாக விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்டரில் மொத்தம் நான்கு பேர் இருந்தனர்.
முதற்கட்ட தகவல்களின்படி, உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தில் கேப்டன் ஆனந்த் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக சதர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.