சென்னையில் ஆறாவது கேலோ இந்தியா யூத் கேம்ஸ்-2023 விளையாட்டு போட்டியை பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடங்கி வைக்கிறார்.
தமிழகத்தில் 6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய 4 மாவட்டங்களில் வரும் ஜனவரி 19 முதல் 31 வரை நடைபெற உள்ளன.
இந்நிலையில் இதன் தொடக்க விழாவை பிரதமர் நரேந்திர மோடி நாளை (ஜன.19) நேரு விளையாட்டி அரங்கில் தொடங்கி வைக்கிறார். இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.
பிரதமரின் வருகையை ஒட்டி சென்னையில், பெருநகர காவல்துறை சார்பில் 22,000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுடன் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.