Connect with us

Raj News Tamil

ஹே ராம் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்த கமல்!

சினிமா

ஹே ராம் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்த கமல்!

இசைஞானி இளையராஜா இசையில், கமல் இயக்கி நடித்திருந்த திரைப்படம் ஹே ராம். 2000-ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், 23 ஆண்டுகளுக்கு பிறகு, இந்த திரைப்படம் யூடியூப் பக்கத்தில் ரீ-ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர தினத்தையொட்டி, இன்று மாலை 6 மணிக்கு, ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் யூடியூப் பக்கத்தில் வெளியாக உள்ளதாம்.

இந்த திரைப்படத்தை இதுவரை பார்க்க முடியாமல் உள்ள ரசிகர்களுக்கு, இந்த அறிவிப்பு உற்சாகத்தை அளித்துள்ளது.

More in சினிமா

To Top