புதுச்சேரியில் பிரியன் (22) தஎன்ற கல்லூரி மாணவர் தனது தோழியுடன் ஒரு விடுதிக்கு தங்களது உறவினர்களை சந்திக்க சென்றுள்ளார். அப்போது அங்கு தொலைபேசி வயர் இணைப்பு பாக்ஸ் பொருத்தப்பட்டிருந்த நிலையில் அவர்களுக்கு சந்தேகம் எழுந்தது.
அந்த பாக்ஸை பிரித்து பார்த்த பொது மிகச் சிறிய அளவிலான நவீன தொழில்நுட்ப வசதியுடன் கூடிய ரகசிய கேமிரா பொருத்தப்பட்டு இருப்பது உறுதியானது. இது குறித்து அங்கிருந்த ஊழியர்களிடம் கேட்டபோது தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தனர்.

இதையடுத்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் சம்பந்தப்பட்ட விடுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டனர். பின்னர் பிரியன் அளித்த புகாரின் மீது விடுதியின் மேலாளர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
இதேபோல் அந்த விடுதியிலுள்ள மற்ற அறைகளிலும் ரகசிய கேமிரா பொருத்தப்பட்டுள்ளதா? என்பது தொடர்பான ஆய்வில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.