அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. அன்புமணி ராமதாஸ் மனைவி சௌமியா அன்புமணி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், கட்சி நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.
ஆனால், அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்தப்பட்டதால், சௌமியா அன்புமணியை காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில், இதனை எதிர்த்தும், போராட்டம் நடத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும், உயர்நீதிமன்றத்தில், பாமக சார்பில் மனு அளிக்கப்பட்டது. இந்த கோரிக்கை மனுவை, நீதிபதி வேல்முருகன் விசாரித்தார்.
அப்போது, அண்ணா பல்கலைகழக விவகாரத்தை அரசியலாக்குவது ஏன் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும், இது போராட்டம் நடத்துவதற்கு, ஏற்புடைய விவகாரம் அல்ல என்றும், வெறும் விளம்பரத்திற்காக, இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளீர்கள் என்றும், நீதிபதி தெரிவித்துள்ளார். இதையடுத்து, இந்த கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்து, அவர் உத்தரவிட்டார்.