மின்சாரம் தாக்கி தண்டவாளத்தில் விழுந்த நபர் : நெஞ்சை பதற வைக்கும் வீடியோ

மேற்கு வங்காளத்தில் உள்ள காரக்பூர் ரயில் நிலையத்தில், நின்று கொண்டிருந்த டிக்கெட் பரிசோதகர் மீது உயர் மின் அழுத்த மின் கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கி தண்டவாளத்தில் விழுந்துள்ளார்.

சுஜன் சிங் சர்தார் என அடையாளம் காணப்பட்ட அந்த நபருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய அவர் தற்போது சிகிச்சையில் உள்ளார்.

நெஞ்சை பதற வைக்கும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.