தொகுதி மறுசீரமைப்பு கூட்டுக்குழு கூட்டம்.. Highlights என்னென்ன?

மத்திய அரசின் சார்பில், அடுத்த ஆண்டு தொகுதி மறுசீரமைப்பு நடத்தப்பட உள்ளது. இதனால், மக்கள் தொகை குறைவாக உள்ள மாநிலங்களில், நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, நாடாளுமன்ற தொகுதிகள் குறையும் நம்பப்படுகிற மாநிலத்தின் முதலமைச்சர்கள், முன்னாள் முதலமைச்சர்கள் ஆகியோரை இணைத்து, கூட்டுக் குழு கூட்டத்தை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தினார்.

இந்த கூட்டத்தில், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உள்பட, பல்வேறு மாநிலங்களின் முக்கிய தலைவர்கள் கலந்துக் கொண்டுள்ளனர். மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும், இந்நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றினார்.

இந்த நிகழ்வில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, “மாநில உரிமைகளை பறிக்கும் கட்சியாக, பாஜக எப்போதும் உள்ளது. மாநில உரிமைகளை நிலைநாட்ட தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று கூறினார். மேலும், “தொகுதி மறுசீரமைப்பால், தமிழ்நாடு 6-ல் இருந்து 10 நாடாளுமன்ற தொகுதிகளை இழக்க நேரிடும்” என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, “பாஜகவினர் தாங்கள் நினைப்பதையே முடிவாக எடுத்து வருகின்றனர். நம்மை அவர்கள் பேசுவதற்கு அனுமதிப்பதே இல்லை” என்று கூறினார்.

முக்கிய தலைவர்களின் உரைகளுக்கு இடையே, பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக், காணொளி காட்சி மூலமாக, நிகழ்ச்சியில் உரையாற்றினார். அப்போது, “மக்கள் தொகையை கட்டுப்படுத்தி, நாட்டின் வளர்ச்சிக்கு உதவிய மாநிலங்களை தண்டிக்கக் கூடாது” என்று, தனது கருத்தினை பதிவு செய்தார்.

இதையடுத்து, கர்நாடக மாநிலத்தின் துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் பேசும்போது, “தொகுதி மறுசீரமைப்பு என்பது அநீதி மட்டுமல்ல, துரோகமும் தான். ஜனநாயகத்தை காப்பதற்காக, அனைவரும், இங்கு கூடியுள்ளோம்” என்று கூறினார்.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, “மறுசீரமைப்பு செய்யப்பட்டால், தென் இந்தியாவின் நாடாளுமன்ற தொகுதிகளின் சதவீதம், 30 சதவீதத்தில் இருந்து, 20 சதவீதமாக குறையும் அபாயம் உள்ளது” என்று கூறினார். மேலும், “1973-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புப்படியே தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும்” என்றும் வலியுறுத்தினார்.

இந்த கூட்டத்தின் மைய நோக்கமாக, இறுதியாக முக்கியமான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதாவது, 30 ஆண்டுகளுக்கு பிறகு தான், தொகுதி மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்று, அந்த கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், பிரபல நட்சத்திர விடுதியில் நடைபெற்ற இந்த கூட்டம், 3 மணி நேரங்களுக்கு பிறகு, தற்போது நிறைவடைந்துள்ளது. மேலும், தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான அடுத்த கூட்டம், ஐதராபாத்தில் நடைபெறும் என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News