உள்ளூர் மொழிகளுக்கு ஹிந்தி போட்டியில்லை: அமித் ஷா!

“உள்ளூர் மொழிகளுக்கு ஹிந்தி போட்டியில்லை என்று நேற்று நடந்த அலுவல் மொழிக்கான பார்லிமென்ட் குழுவின், 38வது கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

அவர் பேசியதாவது:

உலகளவில் ஹிந்தி மற்றும் நாட்டின் அனைத்து மொழிகளையும் பிரதமர் நரேந்திர மோடி பிரபலப்படுத்தி வருகிறார். உள்ளூர் மொழிகளுக்கு ஹிந்தி போட்டியில்லை.

அனைத்து மொழிகளையும் ஊக்குவிப்பதன் வாயிலாகவே, நாடு அதிகாரம் பெறும். மொழிகள் நாட்டை ஒன்றிணைக்க பாடுபட்டுள்ளன. பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளை, 10 மொழிகளில் துவங்க மத்திய அரசு முயற்சி எடுத்து வருகிறது. விரைவில் இந்தப் படிப்புகள் நாட்டின் அனைத்து மொழிகளிலும் கிடைக்கும். அதிகாரப்பூர்வ மொழியை ஏற்றுக்கொள்வது, சட்டம் அல்லது சுற்றறிக்கையிலிருந்து வரக்கூடாது.

நல்லெண்ணம், உத்வேகம் மற்றும் ஊக்கம் ஆகியவற்றிலிருந்து வர வேண்டும். உள்ளூர் மொழிகளுக்கு மரியாதை கொடுக்கும் போது தான், அதிகாரப்பூர்வ மொழி ஏற்றுக் கொள்ளப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

RELATED ARTICLES

Recent News