இந்தி பயிற்று மொழி விவகாரம்: முதல்வர் பினராயி விஜயன் கடிதம்!

மத்திய கல்வி நிறுவனங்களில் இந்தியை கட்டாயமாக்கும் அமித்ஷாகுழுவின் பரிந்துரைக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில்- பிரதமர் மோடி விளக்கம் தரவேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.

மத்திய அமைச்சர் அமித்ஷா தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு இந்தி மொழியை ஆட்சிமொழியாக்கும் வகையில் குடியரசு தலைவருக்கு சில பரிந்துரைகளை அளித்துள்ளது. இதனால் கேந்திரிய வித்யாலாயா முதல் ஐ.ஐ.டி. வரை அனைத்து மத்திய கல்வி நிறுவனங்களிலும் இந்தியே இனி பயிற்றுமொழியாக இருக்கும் என்ற அச்சம் நிலவுகிறது.

இந்த பரிந்துரைக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் மத்திய கல்வி நிறுவனங்களில் இந்தியை கட்டாயமாக்கும் அமித்ஷாகுழுவின் பரிந்துரைக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயனும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில்- பிரதமர் மோடி விளக்கம் தரவேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார். கேரளமாநில இடதுசாரி தலைவர்களும் இதே கருத்தை தெரிவித்துள்ளனர்.