Connect with us

Raj News Tamil

காதலர் தின வாழ்த்து மடலை தீயிட்டு கொளுத்திய இந்து முன்னணியினர்..!

இந்தியா

காதலர் தின வாழ்த்து மடலை தீயிட்டு கொளுத்திய இந்து முன்னணியினர்..!

புதுச்சேரியில் காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, காதலர் தினத்தையொட்டி சலுகை அறிவித்திருந்த நகை கடையை இந்து முன்னணியினர் முற்றுகையிட்டு அராஜகத்தில் ஈடுபட்டதால் கடைக்கு வந்த வாடிக்கையாளர்கள் அச்சமடைந்தனர். தொடர்ந்து காதலர் தின வாழ்த்து மடலை தீயிட்டு கொளுத்திய இந்து முன்னணியினரை போலீசார் கைது செய்தனர்.

உலக முழுவதும் இன்று காதலர் தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, புதுச்சேரி அண்ணா சாலையில் காதலர் தினத்திற்கு சலுகை அறிவித்திருந்த நகை கடையை, இந்து முன்னணியைச் சேர்ந்த 8 பேர் முற்றுகையிட்டு, அராஜகத்தில் ஈடுபட்டனர்.

கடையில் வைக்கப்பட்டிருந்த காதலர் தின விளம்பர பலகையை அப்புறப்படுத்தச் சொல்லி கடை ஊழியர்கள் மற்றும் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் கடைக்கு வந்த வாடிக்கையாளர்கள் அச்சமடைந்தனர். தொடர்ந்து காதலர் தின வாழ்த்து மடலை இந்து முன்னணியினர் தீயிட்டு கொளுத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அந்த பகுதியில் பதட்டமான சூழல் ஏற்பட்டதால், இந்து முன்னணியினரை போலீசார் கைது செய்து சைரன் வைத்த வாகனத்தில் அழைத்து சென்றனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in இந்தியா

To Top