தமிழகத்தின் ஸ்ரீரங்கம், பார்த்தசாரதி கோவில் உட்பட அனைத்து பெருமாள் கோவில்களிலும் இன்று அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. சென்னை பார்த்த சாரதி கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருந்தது.
இந்த நிகழ்ச்சியை தி இந்து ஆங்கில நாளிதழின் மூத்த புகைப்பட கலைஞரும், பத்திரிகையாளருமான சீனிவாசன் (வயது 56) தனது கேமரா மூலம் பதிவு செய்து கொண்டு இருந்தார். அப்போது அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து அவர் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.
இந்நிலையில் பத்திரிகையாளர் மறைவு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் கே.வி. சீனிவாசன் அவர்களின் குடும்பத்தாருக்கு ரூ.5 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.