Connect with us

Raj News Tamil

UK-வில் உள்ள பில்லினியர்கள்.. இந்தியாவை சேர்ந்த இந்துஜா குடும்பம் முதலிடம்..

உலகம்

UK-வில் உள்ள பில்லினியர்கள்.. இந்தியாவை சேர்ந்த இந்துஜா குடும்பம் முதலிடம்..

இந்திய நாட்டை சேர்ந்தவர்கள் உலகப் பணக்காரர்களின் பட்டியலில் குறைவான அளவிலேயே இடம்பெற்று வருகின்றனர். இந்தியர்கள் பிறரிடம் வேலை செய்யவே ஆவலாக இருக்கிறார்கள்.

நிறுவனத்தை நடத்தி பிறரை வேலை வாங்குவதற்கு அவர்கள் ஆசைப்படவே இல்லை என்று சிலர் கூறுவதை நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், நம்முடைய இந்திய வம்சாளியை சேர்ந்த குடும்பம் ஒன்று, பிரிட்டன் நாட்டின் டாப் 20 பில்லினியர்களில், முதலிடத்தை பிடித்து, பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளனர்.

அதாவது, சண்டே டைம்ஸ் என்ற இதழில், பிரிட்டன் நாட்டின் டாப் 20 பில்லினியர்களின் லிஸ்ட் வெளியிடப்பட்டுள்ளது. அந்த லிஸ்டில், கோபி இந்துஜா மற்றும் அவரது குடும்பம் முதலிடத்தை பெற்றுள்ளது.

அதாவது, இந்த குடும்பம் 37.2 பில்லியன் பிரிட்டன் பவுண்டுகளை சொத்தாக வைத்திருப்பதாக அந்த பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முதல் முறை மட்டுமல்லாது, 3-வது முறையாக, இந்த பட்டியலில் இந்துஜா குடும்பம் முதலிடத்தை தக்கவைத்துள்ளது.

கோபி இந்துஜா மற்றும் அவரது குடும்பம் பற்றிய தகவல்கள்:-

இந்தியாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த இந்நிறுவனம், தற்போது லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. இந்நிறுவனம், ஆற்றல், ஊடகம், பொழுதுபோக்கு, வங்கி, நிதி மற்றும் பல்வேறு துறைகளில், தங்களது வணிகத்தை நடத்தி வருகிறது. உலகம் முழுவதும் இந்த நிறுவனத்தின் கீழ், 2 லட்சம் பேர் பணிபுரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த டாப் 20 லிஸ்டில் இடம்பெற்றுள்ள மற்ற பிசினஸ் மேன்கள் யார் என்பதை தற்போது பார்க்கலாம்;-

2. சர் லியோனார்ட் பிளாவட்னிக் ( 29.25 பில்லியன் பவுண்டுகள் ) , 3. டேவிட், சைமன் ரூபன் மற்றும் குடும்பம் ( 24.98 பில்லியன் பவுண்டுகள் ) , 4. சர் ஜிம் ராட்க்ளிஃப் ( 23.52 பில்லியன் பவுண்டுகள் ) , 5. சர் ஜேம்ஸ் டைசன் மற்றும் குடும்பம் ( 20.8 பில்லியன் பவுண்டுகள் ) ,

6. பர்னபி மற்றும் மெர்லின் ஸ்வெயர் மற்றும் குடும்பம் ( 17.2 பில்லியன் ) , 7. ஐடான் ஆஃபர் ( £14.96 பில்லியன் ) , 8. லட்சுமி மிட்டல் மற்றும் குடும்பம் – £14.92 பில்லியன் , 9. கை, ஜார்ஜ், அலன்னா மற்றும் கேலன் வெஸ்டன் மற்றும் குடும்பம் – £14.49 பில்லியன், 10. ஜான் ஃப்ரெட்ரிக்சன் மற்றும் குடும்பம் – £12.87 பில்லியன்,

11. கிர்ஸ்டன் மற்றும் ஜோர்ன் ரௌசிங் – £12.63 பில்லியன், 12. அலெக்ஸ் கெர்கோ – 12.05 பில்லியன் பவுண்டுகள் , 13. மைக்கேல் பிளாட் – 12 பில்லியன் பவுண்டுகள், 14. சார்லின் டி கார்வால்ஹோ-ஹைனெகன் மற்றும் மைக்கேல் டி கார்வால்ஹோ – £11.75 பில்லியன், 15. வெஸ்ட்மின்ஸ்டர் டியூக் மற்றும் க்ரோஸ்வெனர் குடும்பம் – £10.13 டிரில்லியன்,

16. Marit, Lisbet மற்றும் Sigrid Rausing – £9.19 பில்லியன் , 17. கேரி மற்றும் ஃபிராங்கோயிஸ் பெரோடோ மற்றும் குடும்பம் – £9.17 பில்லியன், 18. நிக்கி ஓபன்ஹைமர் மற்றும் குடும்பம் – 7.94 டிரில்லியன் பவுண்டுகள், 19. லார்ட் பாம்ஃபோர்ட் மற்றும் குடும்பம் – 7.65 பில்லியன் பவுண்டுகள், 20. டெனிஸ், ஜான் மற்றும் பீட்டர் கோட்ஸ் – 7.47 பில்லியன் பவுண்டுகள்

    More in உலகம்

    To Top