ஹிப் ஹாப் ஆதி நடித்து இசையமைத்து வரும் திரைப்படம் வீரன். மரகதநாணயம் படத்தை இயக்கிய இயக்குனர் ஏ. ஆர். கே சரவணன் இந்த படத்தை இயக்கியுள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

வீரன் படத்தில் அதீரா ராஜ், முனீஸ்காந்த், காளி வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படம் வருகின்ற ஜூன் 2 அன்று உலகமெங்கும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.