டெல்லியின் வடக்கு பிளாக்கில் உள்ள உள்துறை அமைச்சக அலுவலகத்திற்கு வெடிகுண்டு இருப்பதாக மின்னஞ்சல் மூலமாக மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து வெடிகுண்டு செயலிழக்கும் குழு மற்றும் தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன.
சமீப காலமாக பள்ளிகள், விமான நிலையங்கள், மருத்துவமனைகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் தொடர்ந்து வந்துகொண்டே இருப்பது மக்கள் மத்தியில் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லியைத் தவிர ஜெய்ப்பூர், லக்னோ, கான்பூர், அகமதாபாத் ஆகிய நகரங்களில் உள்ள பள்ளிகளுக்கும் இதுபோன்ற மிரட்டல்கள் வந்துள்ளன.