இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் வேலை மற்றும் கல்விக்காக லண்டன் செல்கின்றனர். பெரும்பாலும் வீடுகளை குத்தகை அல்லது வாடகைக்கு எடுத்து தங்குவது வழக்கம். கொரோனா காலத்தில் பலரும் தங்களது சொந்த ஊருக்கு திரும்பியதால் பல வீடுகள் காலியாக இருந்துள்ளன.
தற்போது இயல்பு நிலை திரும்பி வருவதால், மீண்டும் லண்டனுக்கு வரும் வெளிநாட்டினர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால் வீட்டு வாடகையும் உயர்ந்துள்ளது. லண்டனில் ஒரு மாத சராசரி வீட்டு வாடகை இந்திய மதிப்பில் 2 ,50,000 ரூபாயாக உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு மட்டும் 9.7 சதவீதம் வாடகை உயர்ந்துள்ளது. லண்டனில் உயர்ந்தப்பட்ட மின்சார கட்டணத்துடன் தற்போது வீட்டு வாடகையும் உயர்ந்துள்ளதால் சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.