ஓசூர் வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் : விறுவிறுப்பான வாக்குப்பதிவு.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ஓசூர் வழக்கறிஞர்கள் சங்கத்திற்கு நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்ற வருகிறது.

ஓசூர் வழக்கறிஞர்கள் சங்க அலுவலக கட்டிடத்தில் தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் தேர்தல் நடத்துனர் முன்னிலையில் வாக்குப்பதிவானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் உள்ள 226 உறுப்பினர்களில், தலைவர், துணைத் தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல் ஆனது தற்பொழுது நடைபெற்று வருகிறது.

இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த வாக்குப்பதிவை தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு மாலையில் முடிவுகள் அறிவிக்கப்படும்.

இதற்கான விரிவான ஏற்பாடுகளை வழக்கறிஞர்கள் சங்கத்தின் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனர். மேலும் காவல்துறையினரும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.