கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கண்டித்து மத்திய பிஜேபி அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ரயில் நிலையம் எதிரே உள்ள எஸ்பிஐ வங்கியின் முன்பு மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ் ஏ முரளிதரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், கேஸ் சிலிண்டர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்த்தி கொண்டே செல்லும் மக்கள் விரோத பிஜேபி அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
அப்போது பெண்கள் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு கண்டிக்கும் விதமாக கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து நூதன போராட்டத்திலும் ஈடுபட்டனர்.