ஓசூர் அருகே, தொடர் மழை காரணமாக, பயிர்கள் நாசமானதால், விவசாயிகள் கவலை அடைந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர், தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில், விவசாயிகள் கேழ்வரகு பயிரை, பயிரிட்டு வந்தனர். இந்த பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்தன.
இந்நிலையில், ஃபெஞ்சல் புயல் காரணமாக கனமழை பெய்ததால், அறுவடைக்கு தயராக இருந்த பயிர்கள், வெள்ளத்தில் சிக்கி நாசமாகியுள்ளன.
இதனை அறிந்த விவசாயிகள், கடும் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து பேசியுள்ள அவர்கள், நாசமாகியுள்ள பயிர்களுக்கு, உரிய நிவாரண உதவியை அரசு வழங்க வேண்டும் என்று, கோரிக்கை விடுத்துள்ளனர்.