கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உத்தனப்பள்ளி பகுதியில், ஐந்தாவது சிப்காட் அமைக்க சுமார் 3800 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்களும் விவசாயிகளும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
உத்தனப்பள்ளி, அயர்னப்பள்ளி மற்றும் நாகமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள சுமார் 3800 ஏக்கர் நிலங்களை, கையகப்படுத்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்களும் விவசாயிகளும் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று உத்தனப்பள்ளி காவல் நிலையம் எதிரே உள்ள திம்மராயப்பா என்பவர் விவசாயி நிலத்தில் உள்ள செல்போன் டவர்கள் மீது ஏறி நின்று கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சுமார் பத்துக்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட விவசாயிகள் அங்குள்ள செல்போன் டவர்கள் மீது ஏறி நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சூளகிரி வட்டாட்சியர் திருமதி அனிதா மற்றும் காவல்துறையினர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.