காருக்குள் புகுந்த நாகப்பாம்பு : ஷோரூமில் இருந்த பணியாளர்கள் அதிர்ச்சி

ஓசூர் அருகே உள்ள பேரண்டப்பள்ளி என்ற இடத்தில் தனியார் கார் ஷோரூம் உள்ளது. இந்த ஷோரூமில் ஓசூரை சேர்ந்த ஒருவர் தனது புதிய காரை சர்வீஸ்க்காக ஒப்படைத்துள்ளார். அப்பொழுது பழுது நீக்கும் பணியில் ஈடுபட்ட பணியாளர்கள் திடீரென காரின் உள்ளிருந்து சத்தம் வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதனைத்தொடர்ந்து பணியாளர்கள் காரின் முன்பக்க பானட்டை திறந்து பார்த்தபோது உள்ளே நாகப்பாம்பு ஒன்று இருந்துள்ளது. படம் எடுத்து ஆடிய அந்த நாகப்பாம்பால் பணியாளர்கள் அச்சமடைந்தனர். இதனையடுத்து பணியாளர்களின் ஒருவர் சுதாரித்து அந்த நாகப்பாம்பை இலாபமாக பிடித்து சாக்கு பையில் அடைத்துள்ளார்.

இதனை அடுத்து அங்கிருந்த பணியாளர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். தொடர்ந்து அந்த பாம்பை பணியாளர்கள் பாதுகாப்பாக அருகில் உள்ள வனப்பகுதிக்கு கொண்டு சென்று விடுவித்தனர். கார் உரிமையாளர் அவரது வீட்டின் அருகே புதர் உள்ள பகுதியில் காரை நிறுத்தியுள்ளார். அப்போது காருக்குள் பாம்பு புகுந்ததாக கூறப்படுகிறது.

RELATED ARTICLES

Recent News