Connect with us

Raj News Tamil

வீட்டில் பிரச்சனை.. மந்திரவாதியை நாடிய நபர்.. ஒட்டுமொத்தத்தையும் ஆட்டைய போட்ட கும்பல்..

இந்தியா

வீட்டில் பிரச்சனை.. மந்திரவாதியை நாடிய நபர்.. ஒட்டுமொத்தத்தையும் ஆட்டைய போட்ட கும்பல்..

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் பகுதியை சேர்ந்த பள்ளி ஆசிரியர் சேட்டன்ராம் தேவ்டா. இவரது வீட்டில் தொடர்ச்சியாக பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சேட்டன்ராம், கலு கான் மற்றும் அவரது மகன் அப்துல் காதர் ஆகிய இரண்டு பேரை சந்தித்துள்ளார்.

இவர்கள் இரண்டு பேரும் செய்யும் மந்திரங்களின் மூலம், தனது பிரச்சனை சரியாகிவிடும் என்று அவர் நம்பியுள்ளார்.

அவர்கள் இரண்டு பேரும், “இந்த பிரச்சனைகளின் ஆணி வேர் உங்களுடைய சொத்துக்கள் தான். எனவே அந்த சொத்துக்களை என்னுடைய பெயரில் எழுதி வைத்துவிடுங்கள். பிரச்சனை சரியான பிறகு, மீண்டும் உங்களிடம் ஒப்படைத்துவிடுகிறேன்” என்று கூறியுள்ளார்.

இதனை நம்பி, 4 ஆயிரம் சதுர அடி அளவு கொண்ட சொத்தை, கலு கானின் பெயருக்கு, கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூலை மாதம் அன்று, எழுதி வைத்துள்ளார். இருப்பினும், வீட்டில் நடந்து வந்த பிரச்சனைகள் சரியாகவில்லை. இதனால், கலு கான் மற்றும் அவரது மகன் அப்துல் காதரை அனுகிய பள்ளி ஆசிரியர், சொத்து விற்கப்பட்ட பத்திரத்தை திருப்பி கேட்டுள்ளார்.

இதற்கு, அவ்வாறு செய்தால், உங்களுடைய வீட்டில் உயிரிழப்பு ஏற்படும் என்று பயமுறுத்தியுள்ளனர். மேலும், சேட்டன்ராமின் இன்னொரு 1200 சதுர அடி கொண்ட சொத்தையும், தனது பெயருக்கு மந்திரவாதி மாற்றிக் கொண்டுள்ளார்.

இவ்வாறு மோசடி செய்த இவர்கள், சேட்டன்ராமிடம் இருந்து எழுதி வாங்கிய நிலத்தை, பீர்பால் என்பவருக்கும், ராம் கிஷோர் என்பவருக்கும், 24.91 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர். ஆனால், அந்த பணத்தில், ஒரு ரூபாயை கூட, சேட்டன்ராம்-க்கு மந்திரவாதிகள் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 17-ஆம் தேதி அன்று, சேட்டன்ராம் குடியிருந்த வீட்டை விட்டு காலி செய்யும்படி, பீர்பால் மற்றும் ராம் கிஷோர் கூறியுள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சேட்டன்ராமுக்கு, அதன்பிறகே மந்திரவாதிகள் ஏமாற்றிய விவகாரம் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, சேட்டன்ராமின் மனைவி சுஷ்மா தேவ்டா, காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், இரண்டு மந்திரவாதிகள் உட்பட 4 பேர் மீது குற்றஞ்சாட்டியுள்ளார். ஆனால், இதுவரை, இந்த வழக்கில் யாரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More in இந்தியா

To Top