நவம்பர் 2019-ல் ராமர் கோயில் கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதன்படி, உ.பி.யின் அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி தொடங்கியது. பிரம்மாண்டமான இந்த கோயிலை அடுத்த மாதம் ஜனவரி 22-ல் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.
இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டதாவது,
பத்து ஆண்டுகளுக்கும் மேலாக போர் செய்து தன் மனைவியை மீட்ட ராமரின் பக்தர்களான நாம், மனைவியைக் கைவிட்ட மோடியை எப்படி ராமர் கோயில் பூஜைக்கு அனுமதிக்கலாம் எனக் கூறியுள்ளார்.