Connect with us

Raj News Tamil

“அனிருத்துக்கும் நான் ரசிகன் ஆவேன்” – வெளிப்படையாக சொன்ன கமல்!

சினிமா

“அனிருத்துக்கும் நான் ரசிகன் ஆவேன்” – வெளிப்படையாக சொன்ன கமல்!

ஷங்கர் இயக்கத்தில், கமல் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம், வரும் 12-ஆம் தேதி அன்று, திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.

ரிலீஸ்-க்கு சில நாட்களே இருப்பதால், படத்திற்கான புரமோஷன் பணிகளில், படக்குழுவினர் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இப்படத்தின் புரமோஷன் பணி, மலேசியாவில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட கமலிடம், பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் ஒரு நிரூபர், “இந்தியன் முதல் பாகத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். ஆனால், 2-வது பாகத்தில் அனிருத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனை நீங்கள் எப்படி ஏற்றுக் கொண்டீர்கள்?” என்று கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு பதில் அளித்த அவர், “நான் இளையராஜாவின் ரசிகன். ஏ.ஆர்.ரகுமானின் ரசிகன். இப்போதுதான், அனிருத் வந்திருக்கிறார். அவரது பாடலை கேட்க கேட்க, அவருக்கும் ரசிகன் ஆவேன் என்று நம்புகிறேன்” என்று கூறினார்.

மேலும், இளையராஜாவின் இசையை 40 வருடங்களாகவும், ஏ.ஆர்.ரகுமானின் இசையை 30 வருடங்களாகவும் கேட்டுக் கொண்டு இருக்கிறேன். அந்த இசையை புரிந்துக் கொள்ளவே எனக்கு பல ஆண்டுகள் ஆனது என்று குறிப்பிட்டுள்ளார்.

More in சினிமா

To Top